HEADLINES:
October 16 2018
தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது
25 May 2018

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் பலியாயினர். இதனையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு இயல்புநிலையை கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், அங்கு படிப்படையாக இயல்புநிலை திரும்பு வருகிறது. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.தூத்துக்குடியில், 3 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. போலீஸ் பாதுகாப்புடன் நெல்லைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டன. மற்ற மாவட்டங்களுக்கு மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், அதிகாரிகளும் போலீசாரும் அரசு பஸ்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

 

கைது

 

இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதாக மேலும் 12 பேரை வடபாகம் போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கைதான 65 பேர் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட பின்னர், 68 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

Related Stories