HEADLINES:
October 16 2018
எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களுக்கு மஞ்சள் காமாலை: அமைச்சர் சாபம்
22 May 2018

பாலியா : எதிர்க்கட்சியினர் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொள்பவர்கள் மஞ்சள்காமாலை நோயால் அவதிப்படுவார்கள் என்று உ.பி., அமைச்சர் ஓம்பிரகாஷ் ராஜ்பர் கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி., மாநிலம் பாலியாவில் நடைபெற்ற மதுவிலக்கு விழிப்புணர்வு குறித்த கூட்டத்தில், உ.பி., பிற்படுத்தப்பட்டோர் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஓம்பிரகாஷ் ராஜ்பர் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, பிரதமர் மோடி, உ.பி. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது குஜராத் மாடலை. உ.பி.,யில் அமைப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். அதை, தற்போது அவருக்கு நினைவு கூர விரும்புகிறேன். உ.பி. மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தி, மாநிலத்தை வேறொரு கட்டத்திற்கு முன்னேற்ற நான் உறுதி பூண்டுள்ளேன். இதற்காக, மாநிலமெங்கும் பல்வேறு கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளேன்.

 


சாபம் :


நான் மற்றும் அரசு கூட்டங்களில் கலந்துகொள்ளாமல், எதிர்க்கட்சியினர்கள் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்களுக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு ஏற்படும். இதற்கு ஒரே தீர்வு, தான் நடத்தும் கூட்டங்களில் அவர்கள் (மக்கள்) பங்கேற்பதே ஆகும் என்று ராஜ்பர் கூறினார்.


யார் இந்த ராஜ்பர் :

 

சுஹெல்தேவ் பாரத் சமாஜ் கட்சி என்ற பெயரில் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின் கட்சியை பாரதிய ஜனதாவுடன் இணைத்து, அமைச்சர் பதவியை பெற்றவரே ஓம்பிரகாஷ் ராஜ்பர்.

 

 

 

Related Stories