HEADLINES:
August 18 2018
கர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்?
21 May 2018

பெங்களூரு : கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி, இன்று காலை டில்லி சென்று காங்., தலைவர் ராகுல் மற்றும் சோனியாவை சந்திக்க உள்ளார். அதன் பிறகு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
புதிதாக பதவியேற்க உள்ள கர்நாடக அரசில் 2 துணை முதல்வர்கள் இடம்பெறுவார்கள் என காங்., கட்சியின் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் காங் - மஜத ஆலோசனைக்கு பிறகு யார் யாருக்கு துணை முதல்வர் பதவி என்பது பற்றி முடிவு செய்யப்பட உள்ளது. பா.ஜ.,வின் எடியூரப்பாவை போன்று, குமாரசாமியும் மே 23 அன்று தனியாக தான் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நம்பிக்கை ஓட்டெடுப்பிற்கு பிறகு அமைச்சரவை பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. யார் யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது. புதன்கிழமை காலை குமாரசாமி பதவியேற்ற உடன் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும், அதில் அவர் வெற்றி பெற்ற பிறகு மற்ற அமைச்சரவை சகாக்களை அன்றைய தினமே பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

Related Stories