HEADLINES:
June 21 2018
டில்லி, சண்டிகரில் இடி, மின்னலுடன் புயல்
08 May 2018

 

புதுடில்லி : டில்லி, சண்டிகரை இடி, மின்னலுடன் பலத்த புயல் தாக்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 13 மாநிலங்களில் புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில் தலைநகர் டில்லி, சண்டிகரை புயல் தாக்கியது. டில்லியின் பல பகுதிகளிலும், குருகிராம், நொய்டா உள்ளிட்ட இடங்களிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மின்சாரம் தடைபட்டதால் டில்லி இருளில் மூழ்கியது. 

ராஜஸ்தான், டில்லி, அரியானா ஆகிய 3 மாவட்டங்களுக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரியானாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



கடந்த சில தினங்களுக்கு முன் வட மாநிலங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் 129 பேர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Stories