HEADLINES:
August 18 2018
கண்டன தீர்மான வழக்கில் 5 நீதிபதிகள் இன்று விசாரணை
08 May 2018

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான வழக்கில் இன்று விசாரணை நடக்கிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான கண்டனத் தீர்மான நோட்டீசை மாநிலங்களவை தலைவர் நிராகரித்ததை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக காங். உள்ளிட்ட 7 கட்சிகளின் எம்.பி.க்கள் ராஜ்யசபா தலைவரிடம் கண்டன தீர்மான நோட்டீஸ் அளித்தனர். ஆனால் இந்த நோட்டீசை ராஜ்யசபா தலைவர் வெங்கையாநாயுடு நிராகரித்து விட்டார். இதை எதிர்த்து மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர்களான பிரதாப் சிங், மற்றும் அமீ ஹர்ஷத்ராய் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி சிக்ரி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சான பெஞ்ச் இன்று விசாரிக்கிறது. போதிய உறுப்பினர்கள் கையெழுத்திட்ட போதும் கண்டன தீர்மான நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

Related Stories