HEADLINES:
June 21 2018
தொங்கு சட்டசபை அமைந்தால் யாருடன் கூட்டணி: குமாரசாமி பேட்டி
08 May 2018

பெங்களூரு: தொங்கு சட்டசபை அமைந்தால் காங்., பா.ஜ. ஆட்சி அமைக்க உதவுவோம் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி கூறியுள்ளார்..
கர்நாடகா சட்டசபைக்கு மே 12-ம் தேதி நடக்கிறது. மே 15-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இத்தேர்தலில் காங்,, பா.ஜனதா கட்சிகளுக்கு போட்டியாக நேற்று மதச்சார்பற்ற ஜனதாதளம் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அக்கட்சியின் மாநில தலைவர் எச்.டி. குமாரசாமி பெங்களூருவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசியது,
நாங்கள் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் பொதுத்துறை, தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம். 65 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். அனைவருக்கும் இலவச கல்வி வழங்குவதுடன் நன்கொடை பெறும் பள்ளிகள், கல்லூரிகளை தடை செய்வோம்.தேர்தலில் தொங்கு சட்டசபை அமைந்தால் காங்., அல்லது பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைய உதவுவோம்.மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றுவோம் என்ற உறுதிமொழியை அவர்கள் எங்களுக்கு அளிக்கவேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Related Stories