HEADLINES:
May 23 2018
கர்நாடகா தேர்தல்: பா.ஜ.வில் ஓரம் கட்டப்பட்டாரா கிருஷ்ணா
03 April 2018

பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், காங். கட்சியில் இருந்து விலகி பா.ஜ.வுக்கு தாவிய முன்னாள் முதல்வர் எஸ்.எஸ்.கிருஷ்ணா இப்போது எங்கிருக்கிறார் என்பதே தெரியாத நிலை உள்ளது.
கர்நாடகா சட்டசபைக்கு வரும் மே 12-ம் தேதி நடக்கிறது. இதில் தென் மாநிலங்களில் மீண்டும் ஆட்சி பிடிக்க பா.ஜ. வியூகம் வகுத்து வருகிறது. காங்., பா.ஜ. என இருபெரும் தேசி கட்சிகளுக் கிடையே தான் போட்டி என கூறப்பட்டாலும், மதச்சாரப்றற ஜனதா தளம் என்ற ஒரு கட்சியும் களத்தில் உள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் செல்வாக்கு மிக்க காங்.தலைவராகவும், சிறந்த முதல்வர் என பெயர் பெற்றவருமான எம்.ஸ். கிருஷ்ணா கடந்த ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி திடீரென பா.ஜ.வுக்கு தாவினார்.இவரது பழுத்த அரசியல் அனுபவம், செல்வாக்கினை பபன்படுத்திட பா.ஜ. முடிவு செய்து கட்சியில் முக்கியத்துவம் அளித்தது.தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் எஸ்.எம்.கிருஷ்ணா எங்கே சென்றார் அரசியல் களத்தில் அவர் விலகிவிட்டாரா அல்லது பா.ஜ ஓரம் கட்டிவிட்டதா என நினைக்க தோன்றுகிறது.
கடந்த 1999-2004-ம ஆண்டுகளில் கர்நாடகா காங். முதல்வராக இருந்தார். பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தினார். இந்தியாவின் சிறந்த முதல்வர் எனவும் புகழப்பட்டார். இப்படிப்பட்ட பெருமையுடைய 85 வயது மூத்த தலைவர் கட்சி மாறியதால் அங்கு செல்லாக்காசகிவிட்டார் என கர்நாடகா அரசியல் வட்டாரத்தி்ல் கூறப்படுகிறது.

 

 

Related Stories