HEADLINES:
August 20 2018
ஏப்.17-ல் அபே -டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
03 April 2018

வாஷிங்டன் வடகொரியா தலைவர் கிம்ஜோங் உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே 17-ம் தேதி டிரம்பை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுளளார்.

வடகொரியா தலைவர் கிம் னோங உன் உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனையில்யில் ஈடுபட்டார் . இதற்கு அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில் தென்கொரியா தலையீட்டால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரிய தலைவர் கிம் உடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளார்.
சமீபத்தில் சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்ட கிம் ஜாங் உன்னும் வடகொரியாவில் அமைதி மற்றும் நிலை தன்மை ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறினார் என்று சீன பத்திரிகையில் தகவல் வெளியானது.
இந்த நிலையில், கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு மற்றும் பிற விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வருகிற 17ந்தேதி டிரம்ப் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
இது தொட்ரபாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகொரியா மீது தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதற்கு சர்வதேச நாடுகளின் ஆதரவை பற்றி புளோரிடாவில் டிரம்ப் மற்றும் அபே சந்தித்து ஆலோசனை நடத்துவார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

 

 

Related Stories