HEADLINES:
August 18 2018
கூட்டுறவு சங்க தேர்தல் நிறுத்தம் : திமுக - அதிமுக மோதல்
02 April 2018

சென்னை : இன்று நடைபெறுவதாக இருந்த கூட்டுறவு சங்க தேர்தல் பல பகுதிகளில் நிறுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதிமுக, திமுக.,வினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழையூர் உறங்கான்பட்டியில் சட்டம், ஒழுங்கு பிரச்னை காரணமாக தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தேர்தலை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். அதிமுக மற்றும் தினகரன் தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் போக்கே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. 

பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் கூட்டுறவு தேர்தல் நிறுத்தப்பட்டதை கண்டித்து திமுக.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுச்சீட்டுக்களை கிழித்து ஓட்டுப்பதிவு மையத்தை பூட்டியதாக திமுக.,வினர் புகார் அளித்துள்ளனர். 

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே திருக்குறுங்குடி கூட்டுறவு பண்டகசாலை சங்க தேர்தலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதை போல், தேனி, நாகை, பெரம்பலுார் மாவட்டங்களிலும் கூட்டுறவு சங்க தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

 

Related Stories