HEADLINES:
March 22 2019
அராரியா தொகுதி பயங்கரவாதிகளின் மையமாக மாறும்: மத்திய அமைச்சர் சாபம்
16 March 2018

புதுடில்லி: பீஹாரில் அராரியா தொகுதி வெற்றி குறித்து மத்திய அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

பீஹாரில் நடந்து முடிந்த அராரியா லோக்சபா இடைத்தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி வேட்பாளர் 60 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பா.ஜ. வேட்பாளரை தோற்கடித்தார். 

இந்த வெற்றி குறித்து பீஹார் மாநில பா.ஜ.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தோல்வியடைந்த ஆத்திரத்தில் கூறியது, அராரியா தொகுதியில் அராஜகத்தால் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வெற்றி பெற்றது. அராரியா தொகுதி நேபாள், வங்கதேசம் எல்லையை இணைக்கும் பகுதி. என்பதால். அத்தொகுதி இனி பயங்கரவாதிகளின் மையமாக மாறிவிடும். இது பீஹார் மாநிலத்திற்கு தான் ஆபத்து என்றார் ஆவேசமாக.

 

 

Related Stories