HEADLINES:
March 22 2019
மேகாலயாவில் ஆட்சியை தக்க வைக்க காங்., தீவிரம்
03 March 2018

புதுடில்லி: மேகாலயாவில் ஆட்சியமைக்க சிறிய கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள் அகமது படேல் மற்றும் கமல்நாத் ஆகியோர் அங்கு விரைந்துள்ளனர்.
மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. இங்கு கடந்த பிப்.,27 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. இதில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் முன்னணியில் இருந்தாலும், ஆட்சியமைக்க தேவையான 32 இடங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு தொங்கு சட்டசபையே அமையும் சூழ்நிலை உள்ளது. இதனால், பா.ஜ., உடனடியாக ஏதாவது செய்து ஆட்சியில் அமர்ந்துவிடும் என்ற அச்சம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத் மற்றும் அகமது படேல் விமானம் மூலம் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கிற்கு விரைந்துள்ளனர். அங்கு சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் காங்கிரசை ஆட்சியில் அமர்த்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

 

 

Related Stories