HEADLINES:
July 18 2018
பத்திரிகையாளர் கொலையில் திருப்பம்: முக்கிய குற்றவாளி கைது
03 March 2018

பெங்களுரூ: கர்நாடகாவில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ்,55 கடந்த 2017 செப்டம்பரில் மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டார். சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்.18-ம் தேதி மாண்டியாவின் மதூர் என்ற பகுதியில் போலீசார் நடத்திய வேட்டையில் ஒருவன் சிக்கினான் அவனிடம் இருந்து சட்டவிரோதமாக பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.. தொடர்ந்து நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்டவர் ஹிந்து யுவ சேனா அமைப்பை சேர்ந்த நவீன் குமார்,37 என்பதும் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதன் மூலம் இந்தவழக்கில் திடீர் திருப்பமாக முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். அவனை பெங்களூரு தலைமை மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.

 

 

Related Stories