HEADLINES:
December 10 2018
வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.முத்திரை பதிக்கும்: ரிஜிஜூ நம்பிக்கை
03 March 2018

புதுடில்லி: 3 மாநில தேர்தலில் பெரும்பான்மை பெற்று வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ. முத்திரை பதிக்கும் என மத்திய அமசை்சர் கிரன் ரிஜிஜூ கூறினார்.
வட கிழக்கு மாநிலங்களான, மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல்கள் நடந்தன. தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன.
ஓட்டு எண்ணிக்கை இன்று துவங்க உள்ள நிலையில் மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூ கூறியது, 3 மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தல்களில் பா.ஜ. அமோக வெற்றி பெரும் திரிபுராவில் பெரும்பான்மை இடங்களை பெற்று இடது சாரி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். மேகலாயாவிலும் மொத்தம் 60 இடங்களில் பா.ஜ. 47 இடங்களில் போட்டியிடுகிறது. இம்மாநிலத்திலும் பெரும்பான்மை பெற்று நிலையான ஆட்சி அமைப்போம். நாகாலாந்திலும் பா.ஜ. தனது செல்வாக்கை நிலை நிறுத்தும், மொத்தத்தில் வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ. முத்திரை பதிக்கும்..இவ்வாறு கிரன் ரிஜிஜூ கூறினார்.

 

 

Related Stories