HEADLINES:
December 12 2019
எம்.பி.,கள் சம்பளம்: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அவகாசம்
21 February 2018

புதுடில்லி: எம்.பி.,க்களுக்கான சம்பளம் மற்றும் படிகளை நிர்ணயிக்க, நிரந்தர வழிமுறையை உருவாக்குவது தொடர்பான தன் நிலைப்பாட்டை தெரிவிக்க, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம், ஒரு வாரம் அவகாசம் அளித்தது. 

'எம்.பி.,க்களுக்கான சம்பளத்தை, எம்.பி.,க்களே நிர்ணயிக்கக் கூடாது. 'சம்பளம் மற்றும் படிகளை மாற்றியமைப்பது தொடர்பாக நிரந்தர வழிமுறையை உருவாக்க வேண்டும்' என, 'லோக் பிரஹாரிக்' என்ற அரசு சாரா அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள், ஜே. சலமேஸ்வர், சஞ்சய் கிஷண் கவுல் அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமர்வு கூறியதாவது: இந்த வழக்கு தொடர்பாக, கடந்தாண்டு செப்டம்பரில் அளித்த பதிலில், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து தெளிவாக இல்லை. இந்த விஷயத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியது.

 

 

Related Stories


First        Back       16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  31  32  33  34  35  36       Next        Last