HEADLINES:
November 17 2018
கலாம் பள்ளியை பார்வையிட்ட கமல்
21 February 2018

ராமேஸ்வரம் : இன்று தனது அரசியல் பயணத்தை துவங்கிய கமல், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வீட்டிற்கு சென்றார். அங்கு, கலாமின் குடும்பத்தினரை சந்தித்த கமல், கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்கரை சந்தித்து ஆசி பெற்றார்.

பின் கலாமின் வீட்டில் காலை உணவு சாப்பிட்ட கமல், முத்துமீரான் மரைக்கருக்கு கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார். அரசியல் பயணம் துவக்கும் கமலுக்கு வாழ்த்து கூறிய கலாமின் சகோதரர், கலாமின் புகைப்படம் அடங்கிய நினைவு பரிசு ஒன்றையும் வழங்கினார். 7.45 மணியளவில் கலாமின் வீட்டிற்கு சென்ற கமல், 8.15 மணிக்கு வெளியே வந்தார். கலாம் வீடு முன் கூடியிருந்த ரசிகர்களை பார்த்து கைஅசைத்து விட்டு காரில் புறப்பட்டார். 

கலாம் படித்த மண்டபம் ஒன்றியம் நடுநிலைப்பள்ளிக்கு செல்ல கமலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் பள்ளியின் வெளியில் இருந்தபடி பார்வையிட்டு விட்டு, கமல் அங்கிருந்து தான் தங்கி உள்ள விடுதிக்கு புறப்பட்டார். தொடர்ந்து மண்டபம் கணேஷ் மஹாலில் மண்டபம் பகுதி மீனவர்களை 9.25 மணியளவில் கமல் சந்தித்தார்.

 

 

Related Stories