HEADLINES:
January 27 2020
கலாம் இடத்தில் பயணம் துவங்கியது பெரும் பேறு : கமல்
21 February 2018

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இல்லத்தில், நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை துவக்கி உள்ளார்.

கலாமின் வீட்டிற்கு சென்று அவரது சகோதரரிடம் ஆசி பெற்ற பிறகு, கலாமின் வீட்டில் காலை உணவு சாப்பிட்டார் கமல். அரை மணி நேர சந்திப்பிற்கு பின் கலாம் படித்த மண்டபம் ஒன்றியம் நடுநிலைப்பள்ளியை வெளியில் இருந்தே பார்த்து விட்டு, தான் தங்கியிருந்த தனியார் ஓட்டலுக்கு சென்றார்.

பிறகு கலாமின் இல்லத்திற்கு சென்றது குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் கமல். அதில், பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

spaceplay / pause

 

qunload | stop

 

ffullscreen

shift + slower / faster

volume

 

mmute

seek

 

 . seek to previous

12… 6 seek to 10%, 20% … 60%


ரசிகர்களுக்கு வேண்டுகோள் : 
கமல் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நம் முதல் பணி தன்னார்வ தொண்டர்களை ஒருங்கிணைத்து நாம் எடுத்துக் கொண்ட 8 கிராமங்களை உயர்த்துவது தான். இனியும் குறை கூறி பலனில்லை, செயலில் இறங்குவோம். நம் கனவு தமிழ்நாட்டை நாமே உருவாக்குவோம். உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் #maiamidea என்ற ஹாஷ்டாக்கில் இணைத்து டுவிட் செய்யவும் என தனது ரசிரக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

Related Stories


First        Back       16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  31  32  33  34  35  36       Next        Last