HEADLINES:
December 06 2019
ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை : கமல்
21 February 2018

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி கலாமின் இல்லத்தில் இருந்து இன்று காலை முறைப்படி தனது அரசியல் பயணத்தை துவக்கினார் கமல். பின்னர் மண்டபம் மீனவர்களுடன் அவர் கலந்தாலோசிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மண்டபம் கணேஷ் மஹாலில் கூடி இருந்த மீனவர்களிடம் 4 நிமிடங்கள் மட்டுமே கமல் பேசினார். அவர்களிடம் கருத்து கேட்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

மீனவர்களிடம் கமல் பேசுகையில், தமிழகத்தின் மிக முக்கிய தொழில்களில் உங்கள் தொழிலும் ஒன்று. அது பாதுகாக்கப்பட வேண்டும். நீங்கள் பாதுகாப்பான முறையில் உங்கள் தொழிலை மேற்கொள்ள வேண்டும். உங்களின் சுக துக்கங்களை பத்திரிகைகள் மூலம் அறிந்து கொள்வதற்கு பதிலாக நேரடியாக அதை கேட்டறிவதற்காகவே இங்கு வந்தேன். உங்கள் வாய்மொழியில் அவற்றை அறிய கடமை பட்டுள்ளேன். இனி அப்படித்தான் நடக்கும். அந்த வாய்ப்பை நான் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க ஆசைப்படுகிறேன். நீங்களும் எனக்கு அந்த வாய்ப்பை கொடுங்கள்.

வெவ்வேறு அரசுகள் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, அவற்றை நிறைவேற்றவில்லை. மீனவர்களின் பேச்சுக்கு செவி சாய்க்க வேண்டியது எங்களின் கடமை. இன்று மாலை கட்சியின் பெயர் அறிவிக்கப்படும். அந்த கூட்டத்திற்கு அனைவரும் வர வேண்டும். வர கடமைப்பட்டவர்கள் வந்தே ஆக வேண்டும் என்றார். மீண்டும் வேறு ஒரு நாளில் மீனவர்களுடன் கலந்துரையாட உள்ளதாக கூறி விட்டு சென்றார்.

 

 

Related Stories


First        Back       16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  31  32  33  34  35  36       Next        Last