HEADLINES:
April 22 2018
மைசூரு ஓட்டலில் பிரதமர் மோடிக்கு இடமில்லை
20 February 2018

மைசூரு: கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் நடந்த கோமதீஸ்வரர் மகாமஸ்தாபிஷேக விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறை ஒதுக்க மைசூருவின் பிரபலமான லலிதா மஹால் பேலஸ் ஓட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டது. அன்றைய தினம் திருமண நிகழ்ச்சிக்கு அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது. 

 

 

பங்கேற்பு

 

 

spaceplay / pause

 

qunload | stop

 

ffullscreen

shift + slower / faster

volume

 

mmute

seek

 

 . seek to previous

12… 6 seek to 10%, 20% … 60%

பிரதமருக்கு வந்த சோதனை

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் ஸ்ரவணபெளகொலாவிலுள்ள கோமதீஸ்வரரின் 88 வது மகாமஸ்தாபிஷேக விழா நடந்து வருகிறது. நேற்று (பிப்.,19) நடந்த விழாவில் பிரதமர் கலந்து கொண்டார். விழாவில் பங்கேற்க மைசூரு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்றார். தொடர்ந்து ரயில்வே நிகழ்ச்சியிலும், பா.ஜ., பேரணியிலும் கலந்து கொண்டார். 

 

 

மறுப்பு


இந்நிலையில், பிரதமர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் தங்குவதற்கு அறை ஒதுக்க வேண்டும் என மைசூருவில் உள்ள லலிதா மஹால் பேலஸ் ஓட்டல் நிர்வாகத்திடம் அதிகாரிகள் அணுகினர். ஆனால், அறையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

 

3 அறைகள் மட்டுமே காலி


இது தொடர்பாக ஓட்டலின் பொது மேலாளர் ஜோசப் மதியாஸ் கூறியதாவது: துணை கமிஷனர் அலுவலக ஊழியர்கள் எங்களை அணுகி, பிரதமர் மோடிக்கும் அவரது அலுவலக ஊழியர்களுக்கும் அறை ஒதுக்க வேண்டும் எனக்கூறினர். ஆனால், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தவர்கள் அறைகளை முன்பதிவு செய்துவிட்டனர். 3 அறைகள் மட்டுமே காலியாக இருந்தன. ஆனால், அது அவர்களுக்கு போதாது. பாதுகாப்பு காரணமாக 3 அறைகளை மட்டும் ஒதுக்குவது சரியாக இருக்காது எனக்கூறினார்.

 

 

மாற்று ஏற்பாடு

இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் , ரேடிசன் புளு ஓட்டலில் பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகளுக்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டது.

 

 

Related Stories


First        Back       1  2  3  4  5  6  7  8  9  10  11  12       Next        Last