HEADLINES:
September 20 2018
தலைமை செயலரை தாக்கிய எம்.எல்.ஏ.,க்கள் ; கெஜ்ரிவால் மீது கவர்னரிடம் திடுக் புகார்
20 February 2018

புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில், டில்லி தலைமை செயலருக்கு அவமதிப்பு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக துணை நிலை ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை ஆம் ஆத்மி மறுத்துள்ளது. 

 

 

புகார்

டில்லி தலைமை செயலராக இருப்பவர் அன்சு பிரகாஷ். இவர் ஒரு விவாதம் தொடர்பாக முதல்வர் வீட்டிற்கு அழைக்கப்பட்டார். அங்கு முதல்வர் கெஜ்ரிவாலுடன் ஆலோசனை நடந்து கொண்டிருந்த போது அமானுத்துல்லா உள்ளிட்ட இரு எம்.எல்.ஏ.,க்கள் அவதூறாக பேசியதாகவும், அடித்ததாகவும், மேலும் தன்னை அவமானப்படுத்தியதாகவும் அன்சு பிரகாஷ், துணை நிலை ஆளுநர் அனில் பைஜாஜிடம் புகார் அளித்துள்ளார்.

 

spaceplay / pause

 

qunload | stop

 

ffullscreen

shift + slower / faster

volume

 

mmute

seek

 

 . seek to previous

12… 6 seek to 10%, 20% … 60%

Powered by Vasanth & Co

 

 

 

எம்.எல்.ஏ.,க்கள் மறுப்பு

இந்த புகார் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் கெஜ்ரிவாலும், எம்.எல்.ஏ.,க்களும் இதனை மறுத்துள்ளனர். 


ஆட்சிக்கு தடை

தலைமை செயலர் புகாரை ஆம் ஆத்மி கட்சியும் மறுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை: தலைமை செயலரின் குற்றச்சாட்டு பொய். சில எம்எல்ஏக்களை அவர் மோசமாக திட்டினார். எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் சென்றுவிட்டார். தற்போது, அவர் பா.ஜ., விருப்பப்படி பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். தலைமை செயலர் ஒருவரால், இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை கூற முடியுமானால், அலுவலர்கள் மூலம் அரசிற்கு பா.ஜ., எவ்வளவு தடை ஏற்படுத்துகிறது என்பதை ஒருவர் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கட்சி தலைவர் ஒருவரை தலைமை செயலகத்தில் ஊழியர்கள் கடுமையாக தாக்கியதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.

 

 

Related Stories