HEADLINES:
September 20 2018
தமிழக அரசியலில் காகித பூக்கள் மணக்காது: ஸ்டாலின்
20 February 2018

சென்னை: தமிழக அரசியலில் காகித பூக்கள் மலரலாம்; ஆனால், மணக்காது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

ஆயிரங்காலத்து பயிர்

நாளை(பிப்.,21) நடிகர் கமல் அரசியல் பயணம் துவங்க உள்ள நிலையில். தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதம்: தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சி காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது. திராவிட மொழி பெருமைக்கும், மக்கள் உரிமைக்கும் உணர்வூட்டும் ஆயிரங்காலத்து ஜீவாதார பயிர் திமுக. ஜீவாதார பயிரை பாதுகாக்கும் வேலியாக கோடிக்கணக்கான தொண்டர்களில் முன்னிற்கும் தொண்டனாக இருக்கிறேன்.பருவநிலை மாறும்போது சில பூக்கள் திடீரென மலரும். சில உதிரும். 

 

spaceplay / pause

 

qunload | stop

 

ffullscreen

shift + slower / faster

volume

 

mmute

seek

 

 . seek to previous

12… 6 seek to 10%, 20% … 60%

Powered by Vasanth & Co

 

 

மாறி மாறி...

பல லட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடும் கட்சிதான் திமுக. குடும்ப கட்சி என்று சொல்ல காரணம், பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக உடன்பிறப்புகள் உள்ளனர். திமுக பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. அரசியல் வாழ்வில் மகிழ்ச்சி தென்றலும், நெருக்கடி புயலும் மாறி மாறி வந்து போகும். அறிவாலயம் என்னும் பெயருக்கு ஏற்ப அதை அனுதினமும் தொழுதிடும் கோயிலாக தொண்டர்கள் நினைக்கின்றனர்.. எளியவர்களாக இருந்தாலும், கறுப்பு - சிவப்பு வேட்டி அணிவதில் கம்பீரத்தை வெளிப்படுத்துகிறார்கள். மாவட்ட வாரியாக நடக்கும் திமுகவினருடனான சந்திப்பு புதிய அனுபவமாக உள்ளது. திமுக வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

 

Related Stories