HEADLINES:
July 18 2018
கட்சி அலுவலகங்களுக்கு டில்லியில் நெருக்கடி
20 February 2018

புதுடில்லி: பா.ஜ., கட்சி தலைமை அலுவலகத்தை டில்லி, தீன் தயாள் உபத்யாய் மார்க் பகுதிக்கு மாற்றியதை தொடர்ந்து, அரசு கட்டடங்களில் செயல்படும் மற்ற கட்சிகளும் தங்களது அலுவலகத்தை மாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

 

பா.ஜ., அலுவலகம் மாற்றம்

டில்லியில் லெய்டன்ஸ் பங்களா மண்டல் பகுதியில் உள்ள அரசு கட்டடங்களில் அரசியல் கட்சி அலுவலகங்கள் செயல்படுகின்றன. தற்போது, காங்கிரஸ் 4 கட்டடங்களையும், பா.ஜ., 2 கட்டடங்களையும் ஆக்கிரமித்துள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இந்த பகுதியில் உள்ள கட்சிகளின் அலுவலகத்தை காலி செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 

 

spaceplay / pause

 

qunload | stop

 

ffullscreen

shift + slower / faster

volume

 

mmute

seek

 

 . seek to previous

12… 6 seek to 10%, 20% … 60%

Powered by Vasanth & Co

தொடர்ந்து, இதுவரை டில்லியின் அசோகா சாலையில் இருந்த பா.ஜ., அலுவலகம், தீன் தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் புது கட்டடம் கட்டப்பட்டு நேற்று முன்தினம் (பிப்.,18) திறந்து வைக்கப்பட்டது. நேற்று முதல் புதிய அலுவலகத்தில் இருந்து பா.ஜ., நிர்வாகிகள் பணியை துவக்கினர். இது மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியைஏற்படுத்ததி உள்ளது. 

 

மறுப்பு

இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: பா.ஜ., புதிய அலுவலகத்திற்கு மாறிவிட்டாலும், பழைய கட்டடத்தை எப்போது ஒப்படைக்கும் என தெரியாது. அக்கட்சி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகமும் நவம்பர் மாதத்தில் தயாராகிவிடும் என தெரிகிறது. 

தற்போது சாணக்யபுரி பகுதியில் உள்ள காங்கிரஸ் தலைமையகம், இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் ஆகியவற்றை காலி செய்ய மத்திய வீட்டுவசதி அமைச்சகம் உத்தரவிட்டது. 

இதற்காக கடந்த 2010ல் தீன் தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், பா.ஜ., தலைவரின் பெயரில் உள்ள அந்த பகுதிக்கு மாற்ற காங்கிரஸ் மறுத்துவிட்டது. ரோஸ் அவென்யு பகுதியில் புதிய அலுவலகம் அமைத்து வருகிறது. மற்ற கட்சிகள் தங்கள் விரும்பிய இடத்தில், அதிகளவு நிலம் ஒதுக்க வேண்டும் என கூறி வருகின்றன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 

Related Stories