HEADLINES:
July 05 2020
நாளை கட்சி பெயர், கொடி அறிவிக்கிறார்; மதுரை வந்த கமலுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
20 February 2018

மதுரை: வாழ்க்கையின் முக்கிய தருணத்தில் நிற்கிறேன். என்னை ஆசி வழங்கி திரை உலகிற்கு அனுப்பிய மதுரை மண்ணில் நிற்கிறேன். நாளை காலை ராமேஸ்வரத்தில் துவங்கி, பரமக்குடி சென்று பின்னர் மாலையில் மதுரை வருவேன் இங்கு நடக்கும் விழாவில் கட்சி கொடி ஏற்றப்படும், கொள்கைகளில் சாராம்சம் அறிவிக்கப்படும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார்.தமிழகத்தில், பா.ஜ.,வை புறக்கணிப்பதன் வாயிலாக, தன் அரசியல் பாதையை, நடிகர் கமல் தெளிவுபடுத்தியுள்ளார். நாளை(பிப்., 21) தன் அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ள கமல், தான் போகவிருக்கும் பாதையை கோடிட்டு காட்டியுள்ளார். அரசியல் பயணத்தை துவங்குவதற்கு முன், பல்வேறு கட்சி தலைவர்களை, அவர் சந்தித்து வருகிறார்.

மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த, கேரள முதல்வர், பினராயி விஜயன், டில்லி முதல்வர், அர்விந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, தி.மு.க., தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர், நல்லகண்ணு, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் ஆகியோரை சந்தித்தார். ஆனால், பா.ஜ., மூத்த தலைவர்கள் எவரையும், அவர் சந்திக்கவில்லை.நடிகர் கமல், அரசியலில், பா.ஜ.,வுக்கு எதிர் திசையில் பயணிக்கப் போவதை, இச்சந்திப்புகள் வாயிலாக உறுதி செய்துள்ளார். 

 

spaceplay / pause

 

qunload | stop

 

ffullscreen

shift + slower / faster

volume

 

mmute

seek

 

 . seek to previous

12… 6 seek to 10%, 20% … 60%

அ.தி.மு.க.,வை சந்திக்க மாட்டேன்

இதுகுறித்து, கமல் ஆதரவாளர்கள் கூறுகையில், 'பா.ஜ., மட்டுமின்றி அ.தி.மு.க., காங்கிரஸ் தலைவர்களையும், கமல் சந்திக்கவில்லை' என்றனர். 

மதுரை வந்த கமலஹாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

 

இன்று மதுரை வருகை:

நடிகர் கமல் தனது அரசியல் கட்சியை அறிமுகப்படுத்தி முதல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மதியம் 12.30க்கு மதுரை வருகிறார். அவருக்கு மதுரை விமான நிலையத்தில் பிராமாண்ட வரவேற்பு அளிக்க அவரது இயக்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.


அங்கு தான் ஊழல் இருக்கிறது


அதிமுக நிர்வாகிகளை சந்திக்க மாட்டேன் என கமலஹாசன் கூறியுள்ளார். நாளை அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் துவக்கவிருக்கும் கமல் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். இன்று கமல் வீட்டிற்கு இயக்குனர் சீமான் சென்று வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து இருவரும் நிருபர்களிடம் பேசினர். மாற்றம் வேண்டும் என்ற நேரத்தில் அரசியலில் கமல் குதித்துள்ளார். நாட்டிற்கு நல்லது செய்ய போதிய ஆள் இல்லாமல் இருப்பதால் என்னை போன்ற சினிமா துறையினர் அரசியலுக்கு வர வேண்டியுள்ளது. அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. இதனால் யார் வேண்டுமானாலும் வரலாம் என சீமான் கூறினார். 
தொடர்ந்து கமல் பேசுகையில்; பல தரப்பினரையும் நான் சந்தித்து வருவதில் தற்போது சீமானும் ஒருவர் என்றார். அனைத்து தரப்பினரையும் சந்திக்கும் நீங்கள், அதிமுக நிர்வாகிகளை ஏன் சந்திப்பது இல்லை ? என நிருபர்கள் கேட்டதற்கு, " அங்கு தான் ஊழல் இருக்கிறது ஆட்சி சரியில்லை என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போது அவர்களை நான் நிச்சயம் சந்திக்க முடியாது. சந்திக்கவும் மாட்டேன் " . என்றார்.நாளை கட்சி பெயர், கொடி அறிவிப்பு

கமல் இன்று அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: " நாளை (21 ம் தேதி ) துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க ., இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

Related Stories


First        Back       8  9  10  11  12  13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28       Next        Last