HEADLINES:
August 23 2019
மாட்டிறைச்சி சாப்பிட விழா எதற்கு?: வெங்கையா நாயுடு
20 February 2018

மும்பை: மாட்டிறைச்சி சாப்பிடவும், முத்தம் கொடுக்கவும் விழா எதற்காக கொண்டாடுகிறீர்கள் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: உங்களுக்கு மாட்டிறைச்சி சாப்பிட வேண்டுமா, தாராளமாக சாப்பிடுங்கள். முத்தம் கொடுக்க வேண்டுமா.. கொடுங்கள். யாரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை. ஆனால் இதற்கெல்லாம் விழா எடுத்து கொண்டாடுவது நியாயமா?

பார்லி., மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கு ஆதரவாக மாணவர்கள் சிலர் பேசுகிறார்கள். இங்கே என்ன தான் நடக்கிறது?. இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த ஆண்டு மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்த போது, சென்னை ஐஐடி.,யில் மாணவர்கள் மாட்டிறைச்சி திருவிழா நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Stories