HEADLINES:
May 23 2018
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதில்லை: பாக்., காமெடி
20 February 2018

மூனிச்: பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதில்லை என அந்நாட்டின் ராணுவ தளபதி கமர்ஜாவீத் பேசினார்.

ஜெர்மனியின் மூனிச் நகரில் நடந்த உலக பாதுகாப்பு மாநாட்டில் அவர் பேசியது: ஆப்கனில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகள் சிந்திக்க வேண்டும். ஆப்கன் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்.

பயங்கரவாதிகளுக்கு எப்போதுமே பாகிஸ்தான் புகலிடம் அளித்ததில்லை. எங்கள் மீது குற்றம்சாட்டுவதை தவிர்த்து ஆப்கனில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டதற்கு என்ன காரணம் என சிந்திக்க வேண்டும்.ஆப்கனில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை கண்டுபிடித்து பாகிஸ்தான் அழித்துள்ளது. 27 லட்சம் ஆப்கன் அகதிகளுக்கு அடைக்கலம் அளித்து உள்ளது, என்றார்.

 

 

Related Stories


First        Back       1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16       Next        Last