HEADLINES:
May 22 2018
டிஜிபி நியமனத்தில் விதிமீறல்: மத்திய அரசு தகவல்
20 February 2018

புதுடில்லி: ஓய்வு பெறும் போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, அவர்களை மாநில அரசுகள் டிஜிபியாக நியமித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவை தவறாக பயன்படுத்துவதாக, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது.

 

உத்தரவு


கடந்த 2006 ல் பிரகாஷ் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், போலீஸ் துறையை சீரமைக்க வேண்டும். டிஜிபி மற்றும் உளவுத்துறை தலைவர்கள் பதவிக்காலத்தை குறிப்பிட்ட காலம் நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. 

 

அவமதிப்பு வழக்கு


ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவை பெரும்பாலான அரசுகள் நிறைவேற்றவில்லை எனக்கூறி பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். 
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கன்வில்கர் மற்றும் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது.

 

தவறாக

அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறுகையில், பிரகாஷ் சிங் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவானது, மற்றொரு வழக்கில் போலீஸ் சீர்திருத்தம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை மீறுவது போல் உள்ளது. 2 வருடம் பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பதற்காக ஓய்வு பெற உள்ள போலீஸ் அதிகாரிகளை டிஜிபியாக நியமனம் செய்து கோர்ட் உத்தரவை மாநில அரசுகள் தவறாக பயன்படுத்துகின்றன.எனக்கூறினார். 

 

எதிர்ப்பு

இதற்கு பிரசாந்த் பூஷண் எதிர்ப்பு தெரிவித்தார். டிஎஸ்ஆர் சுப்ரமணியம் என்பவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவானது, போலீஸ் சீர்திருத்தம் தொடர்பான உத்தரவை மீறவில்லை. போலீஸ் துறையில் சீர்திருத்தம் செய்வதை தடுக்க மத்திய அரசு சதி செய்வதாக கூறினார்.
அந்த உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரிய மத்திய அரசின் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதிகள் கூறினர்.

 

அறிவுரை வேணும்

இதனையடுத்து, 2 வருடம் பதவி நீட்டிப்பு வழங்குவதற்காக ஓய்வு பெறும் நிலையில் உள்ள அதிகாரிகளை டிஜிபியாக நியமிக்கக்கூடாது என மாநில அரசுகளுக்கு உத்தரவிடுவது குறித்து சுப்ரீம் கோர்ட் பரிசீலனை செய்ய வேண்டும் அட்டர்னி ஜெனரல் கூறினார். தொடர்ந்து, வழக்கு ஏப்ரல் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

 

 

Related Stories