HEADLINES:
July 18 2018
உ.பி., இனி பிரச்னை பிரதேசமாக இருக்காது
19 February 2018

லக்னோ : உ.பி.,யில் பிப்.,21 முதல் துவங்க உள்ள முதலீட்டாளர் மாநாட்டிற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. 

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உ.பி., ஏழை மாநிலம் என்ற நிலையை மாற்றுவதற்காக நடவடிக்கைகளில் இறங்கி உள்ளோம். உ.பி.,யை குற்றமில்லாத மாநிலமாக மாற்றுவதாக ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாள் முதல் சொல்லி வருகிறோம். குற்றவாளிகள் முதலில் எச்சரிக்கப்பட்டு வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தினாலோ, கொலை செய்தாலோ, போலீசாரை தாக்கினாலோ அதற்கான மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.

உ.பி., குற்றங்களாலும், குற்றவாளிகளாலும் முடக்கப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். உ.பி., நடக்கும் குற்றங்கள், விபத்துக்களே. கலவரங்கள் அல்ல. குற்றச்சம்பவங்களை ஒடுக்கும் பணியிலேயே போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது உ.பி., உண்மையான உத்தர பிரதேசமாக மாறி வருகிறது. இனி பிரச்னை பிரதேசமாக உ.பி., இருக்காது. 

நாட்டில் அதிக முதலீடுகள் கொண்ட மாநிலமாக உ.பி., அமைவதற்காக முயற்சிகளை செய்து வருகிறோம். உ.பி., சூழலை மாற்றுவதற்காகவே இந்த நடவடிக்கைகள் அனைத்தும். சூழ்நிலைகள் நல்லதாக மாறினால், நல்ல விஷயங்கள் சென்றடைந்தால், மக்களும் நல்லவர்களாக மாறுவார்கள் என்றார்.

 

 

Related Stories