HEADLINES:
July 18 2018
ரூ.800 கோடி வங்கி மோசடி: ரோடோமேக் தலைவர் கைது
19 February 2018

கான்பூர் : பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடி, 11 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பியுள்ள நிலையில், 5 வங்கிகளிடம் இருந்து, 800 கோடி ரூபாய் கடன் வாங்கி, அதை செலுத்தாமல்,வெளிநாடு தப்ப முயன்ற மற்றொரு தொழிலதிபரான ரோடேமேக் பேனா நிறுவன தலைவர் விக்ரம் கோத்தாரியை சிபிஐ கைது செய்துள்ளது.

உத்தர பிரதேசத்தில், கான்பூரை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வந்தது, 'ரோடோமேக்' என்ற, பேனா தயாரிப்பு நிறுவனம். அந்த நிறுவனத்தின் உரிமையாளரான, விக்ரம் கோத்தாரி, பல்வேறு பொதுத் துறை வங்கிகளிடம் இருந்து, 800 கோடி ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். 

மோசடி ஆவணங்கள் மூலம் வாங்கிய கடனுக்கு, ஒரு ஆண்டாக, அவர் வட்டி கூட செலுத்தவில்லை. இந்த நிலையில், கான்பூரில் உள்ள அந்த நிறுவனம், ஒரு வாரமாக பூட்டப்பட்டுள்ளது. விக்ரம் கோத்தாரி எங்கே உள்ளார் என, தெரியவில்லை; 

அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என, போலீசார் சந்தேகப்படுகின்றனர். யூனியன் பாங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து, 485 கோடி ரூபாய், அலகாபாத் வங்கியிடமிருந்து, 352 கோடி ரூபாய் உட்பட, பல்வேறு பொதுத் துறை வங்கிகளிடம் இருந்து, அவர், 800 கோடி ரூபாய் கடன்வாங்கியுள்ளார். 

இந்நிலையில் இவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தினர். இதனையடுத்து விக்ரம் கோத்தாரி மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், அவரை கைது செய்துள்ளனர். அவரது வீட்டிலும் சிபிஐ சோதனை செய்தது.

 

 

Related Stories