HEADLINES:
September 19 2018
நிரவ் மோடி விவகாரம்: காங். குற்றச்சாட்டிற்கு பா..ஜ. பதிலடி
16 February 2018

மும்பை :முந்தைய காங்.தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் லலித் மோடி, விஜய்மல்லையா விவகாரம் போன்று தான் நிரவ் விவகாரம் என நிரவ் மோடி விவகாரத்தில் காங். குற்றச்சாட்டிற்கு மத்திய அமைச்சருமான, ரவிசங்கர் பிரசாத், பதிலடி கொடுத்துள்ளார். 

பிரபல நகைக் கடை உரிமையாளர் நிரவ் மோடி, 46, உள்ளிட்டோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11 ஆயிரம் கோடி மோசடி செய்தது அம்பலமானது. எனினும் கடந்த ஜனவரி மாம் 1-ம் தேதி நிரவ் மோடி வெளிநாடு தப்பி ஓடிவிட்டது தெரியவந்தது. நிரவ் மோடி தப்பிக்க உதவியதே பா.ஜ.அரசு தான் என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இதற்கு பதிலடியாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியது, பிரதமர் மோடியின் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே நிரவ் மோடி விவகாரத்தை காங். கிளப்பி வருகிறது. டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் மோடி பங்கேற்ற குழுவில், நிரவ் மோடியும் இடம் பெற்றிருந்ததாக கூறுவது, தவறான தகவல். இந்திய தொழில் கூட்டமைப்பினரின் குழுவில் தான், அவர் இடம் பெற்றிருந்தார் என்றார். உண்மை தெரியாமல் புகைபடத்தை காண்பித்து காங்.. குறைவது சரியல்ல என்றார்.
பா.ஜ. வெளியிட்ட படம்

கடந்த 2013-ம் ஆண்டு டில்லியில் இம்ப்ரீயல் என்ற சொகுசு ஒட்டல் ஒன்றை நிரவ் மோடி கட்டினார் அதன் திறப்பு விழாவில் காங்.தலைவர் ராகுல், அசோக் சவான், ராஜிவ் சுக்லா ஆகிய காங். தலைவர்கள் கலந்து கொண்டனர். அதன் புகைபடத்தை பா.ஜ. நேற்று வெளியிட்டது.

 

 

Related Stories