HEADLINES:
January 19 2019
மீண்டும் சிவசேனா- பா.ஜ. கூட்டணி?
16 February 2018

மும்பை: பா.ஜ.வுடானான கூட்டணியை முறித்துவிட்டதாக சிவ சேவனா அறிவித்த நிலையில் நேற்று மகராஷ்டிரா பா.ஜ. முதல்வர் தேவேந்திரபட்னாவிசை சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்து பேசியுள்ளார்.

மகாராஷ்டிராவில் பா.ஜ., சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனா தலைவர் உத்தவ்தாக்கரே, வரப்போகும் தேர்தல்களில் சிவ சேனா தனித்து போட்டியி்ட்டு தனது பலத்தை காண்பிக்கும் என்றார்.

இந்நிலையில் நேற்று மகாராஷ்டிரா தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் தேவேந்திர பட்னாவிசை, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார். 
இவரும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பேசியதாக தகவல் தெரிவிக்கின்றன.
ஏற்னவே மகாராஷ்டிராவில் காங். குடன் சரத்பவாரின் தேசியவாத காங். கூட்டணி அமைத்துவிட்டன. தற்போது பா.ஜ., சிவசேனா மீண்டும் கூட்டணி ஏற்படுத்தி 2019- பார்லி. லோக்சபா தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

 

 

Related Stories