HEADLINES:
September 19 2018
தமிழக-கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தம் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம்
16 February 2018

சென்னை: தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

காவரி நதிநீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகாவிற்கு செல்லும் பஸ்கள் கிருஷ்ணகிரி , ஈரோடு மாவட்ட எல்லைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே போல் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கர்நாடக மாநில அரசு பஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒசூர் , சத்தியமங்கலம் பகுதயில் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் தமிழகதத்தை சேர்ந்த 11 அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளத.இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு இயக்கப்படும் தனியார் பஸ்கள் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

 

 

Related Stories