HEADLINES:
September 20 2018
அருணாசல் பிரதேசத்தில் மோடியின் பேச்சு: சீனா எரிச்சல்
16 February 2018

புதுடில்லி: பிரதமர் மோடியின் அருணாசல் பிரதேச வருகைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தியா சீனா இடையே 3,448 கி.மீ. தூரம் உள்ள எல்லை பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. மேலும் திபெத்தையொட்டியுள்ளஅருணாசலத்தின் ஒரு பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. 

இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அருணாசல் பிரதேசம் சென்றுள்ள பி ரதமர் மோடி , அருணாபிரதேசத்தில் தான் ஜெய்ஹிந்த் முழக்கம் அதிக அளவில் கேட்கிறது என்றார். இது சீனாவை எரிச்சலடைய வைத்துள்ளது. 

.இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் ஷூகாங்க், கூறியது, "சீனா-இந்தியா எல்லைப் பிரச்சினை பற்றிய சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அருணாசல பிரதேசத்தை சீனா அங்கீகரிக்கவில்லை. ஆனால் அப்பகுதிக்கு இந்திய தலைவர் வருகையை சீனா கடுமையாக எதிர்க்கிறது. என்றார்.

 

 

Related Stories