HEADLINES:
November 13 2018
இன்று மெகா ‛பைக்' பேரணி: அமித்ஷா பங்கேற்பு
15 February 2018

சண்டிகர்: பா.ஜ.கட்சியை வலுப்படுத்தும் விதமாக இன்று அரியானாவின் ஜிந்த் பகுதியில் பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் மெகா மோட்டார் பைக் பேரணி நடத்துகிறது. இதில் ஒரு லட்சம் மோட்டார் பைக்குகள் பங்கேற்கின்றன. 

பைக் ஒட்டிய முதல்வர்

2019-ம் ஆண்டு பார்லி.லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி பா.ஜ. தனது கட்சியை இளைஞர் அமைப்பினர் மூலம் வலுப்படுத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக அரியானாவின் ஜிந்த் பகுதியில் இன்று மெகா மோட்டார் பைக் பேரணி நடக்கிறது. இதில் பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு சிறிது தூரம் மோட்டார் பைக்கினை ஓட்டிச் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக நேற்று ஜிந்த் பகுதியில் மோட்டார் பைக் பேரணி ஒத்திகையில் அரியானா பா.ஜ.முதல்வர் மனோகர் லால் கட்டார் கலந்து கொண்டு தானே மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார். 

 

 

Related Stories