HEADLINES:
May 22 2018
சாலையோரம் சிறுநீர் கழித்த அமைச்சரால் சர்ச்சை
15 February 2018

ஜெயப்பூர்: ராஜஸ்தானின் பிங்க் சிட்டியான ஜெயப்பூர், பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் காளிச்சரண் சாரஃப், காரில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் காரை நிறுத்தி விட்டு அருகே கட்டடம் ஒன்றின் சுவரில் சிறுநீர் கழித்தார். இதன் புகைப்படம் சமூக வலைதளங்களி்ல் வைரலாக பரவியது. நகரில் இது போன்று அசிங்கம் செய்பவர்களுக்கு ரூ. 200 அபாரதம் விதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஜெய்ப்பூர் மாநகராட்சி சார்பில் அமைச்சரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் தரப்பில் பதில் இல்லை எனினும் விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என அமைச்சர் தரப்பு சமரசம் செய்ய முயற்சிக்கிறது.
தூய்மை இந்தியா திட்டத்தை தீவிரப்படுத்தி வரும் ஜெயப்பூர் நகருக்கு பெருமளவு நிதி செலவிடப்பட்டு வரும் நிலையில் அமைச்சரின் இது போன்ற செயல் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது என காங். குற்றம்சாட்டியுள்ளது.

 

 

Related Stories