HEADLINES:
July 18 2018
இன்று கூடுகிறது தமிழக அரமைச்சரவை
15 February 2018

சென்னை : பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (பிப்.,15) கூடுகிறது.

இந்த கூட்டத்தில், பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்க உள்ள நிதி, மானியக் கோரிக்கைகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்படும் என தெரிகிறது. 

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், அரசின் சாதனைகள் தொடர்பாக ஆண்டு மலர் வெளியிடுவது குறித்தும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் கூடும் 6வது அமைச்சரவை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Stories