HEADLINES:
October 19 2018
ஆர்எஸ்எஸ் உதவியை நேரு நாடினார்: உமா பாரதி
14 February 2018

போபால்: காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் உதவியை அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு நாடியதாக மத்திய அமைச்சர் உமாபாரதி கூறினார்.


கடிதம்

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், இந்தியா சுதந்திரம் பெற்றதும், காஷ்மீரை ஆட்சி செய்த மன்னர் ஹரி சிங், இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில், சேக் அப்துல்லா வலியுறுத்தியும் கையெழுத்து போடவில்லை. அப்போது, காஷ்மீரின் உதம்பூரில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென தாக்குதல் நடத்தி முன்னேறியது. அங்கு உடனடியாக செல்வதற்கு தேவையான அதிநவீன சாதனங்கள் இந்திய ராணுவத்திடம் இல்லை. இதனால், அப்போது பிரதமராக இருந்த நேருவுக்கு குழப்பம் ஏற்பட்டது. அவர், ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் உதவியை கேட்டு ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த கோல்வால்கருக்கு கடிதம் எழுதினார்.


ராணுவம் மீது விமர்சனம்

ராணுவம் மீது கல்வீசப்படுகிறது. வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ராணுவம் பெண்களை பலாத்காரம் செய்வதாக ஜவஹர்லால் நேரு பல்கலையில் பேசுகின்றனர். இதெல்லாம் பேச்சுசுதந்திரம். ஆனால், நாட்டிற்காக ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உயிர்தியாகம் செய்ய தயாராக உள்ளதாக கூறுவது மட்டும் ராணுவத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

Related Stories