HEADLINES:
May 26 2018
கோயில், மசூதி என சுற்றி வரும் ராகுலின் போலி மத வேஷம் எடுபடாது: ஜவடேகர்
13 February 2018

பெங்களூரு: ராகுலில் போலித்தனமான மத வேஷம் எடுபடாது என மத்திய அமைச்சர் ஜவடேகர் கூறினார்.

கர்நாடகா மாநிலத்திற்கு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., - காங்., இடையே போட்டி நிலவுகிறது. குஜராத் சட்டசபை தேர்தலின் போது, கோவில் கோயிலாக சென்ற ராகுல் கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற, ஹுலிகம்மா கோவிலில் வழிபாடு நடத்தி, தேர்தல் பிரசார பயணத்தை துவங்கி , முஸ்லிம் மக்களின் ஓட்டுகளை பெறும் முயற்சியாக, , ராய்ச்சூரில் உள்ள தர்காவுக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.

 

குஜராத் காப்பியடிப்பு



இது குறித்து கர்நாடகா மாநில பா.ஜ. தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியது, காங்.தலைவராக பொறுப்பேற்ற ராகுல், டில்லியில் எந்த ஒரு கோயிலுக்கும், மசூதிக்கும் சென்று பிரார்த்தனை செய்ததாக தெரியவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில்குஜராத்தை காப்பியடித்து கர்நாடகாவில் கோயில் கோயிலாக செல்லும் ராகுலின் போலி மத வேஷம் கர்நாடக மக்களிடம் எடுபடாது என்றார்.

 

 

Related Stories