HEADLINES:
July 18 2018
ஸ்ரீநகரில் ராணுவம் - பயங்கரவாதிகள் மோதல்
13 February 2018

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புடையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. 

காஷ்மீரின் பாலேகோட் என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதையறிந்தஅங்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். அங்கு பயங்கரவாதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் சுற்றி வளைத்தனர். இதில் இரு தரப்பிலும் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்புபடை வசம் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

எல்லையில் அத்துமீறல்



இதற்கிடையே இந்தியா-பாக். சர்வதேச எல்லையான பூஞ்ச் செக்டார் பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக். இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. உடன் சுதாரித்து கொண்ட இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். எனவே எல்லையிலும் ஒயாத தொல்லை காரணமாக துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்பதாக அப்பகுதி கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

Related Stories