HEADLINES:
July 17 2018
மோடி, பின்புற கண்ணாடியை பார்த்து வாகனத்தை இயக்குகிறார் : ராகுல்
12 February 2018

பெல்லாரி : பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சி எனும் வாகனத்தை, தன்னுடைய ஆட்சியின் முந்தைய சாதனைகள் எனும் பின்புற கண்ணாடியை பார்த்துக்கொண்டே இயக்குவதால், விபத்துக்கள் ஏற்பட்டு நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
காங்கிரஸ் தலைவர் ராகுல், அங்கு தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ராய்ச்சூர் மற்றும் பெல்லாரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது, பிரதமர் மோடி, நாட்டின் எதிர்காலம் மற்றும் கட்சியின் வருங்காலம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்ளாமல், காங்கிரஸ் கட்சியின் மீது குற்றஞ்சாட்டுதலிலே கவனம் செலுத்திவருகிறார். இது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல...
தனது ஆட்சியின் முந்தைய சாதனைகளையே, பிரதம்ர மோடி தொடர்ந்து பட்டியலிட்டு வருகிறார். இத்துடன் தனது ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது என்பதை அறிந்துவிட்டாரோ என்னவோ என்று ராகுல் கேள்வி கேட்டுள்ளார்.
விபத்து அபாயம் : பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சி எனும் வாகனத்தை, தன்னுடைய ஆட்சியின் முந்தைய சாதனைகள் எனும் பின்புற கண்ணாடியை பார்த்துக்கொண்டே இயக்குவதால், விபத்துக்கள் ஏற்பட்டு நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாகனத்தையை முன்னோக்கி பார்த்து ஓட்டினால் மட்டுமே, குறித்த இடத்திற்கு சரியான நேரத்தில் செல்லமுடியும் என்று இருக்கையில், பிரதமர் மோடி, ஆட்சி எனும் வாகனத்தை தனது ஆட்சியின் முந்தைய சாதனைகள் எனும் பின்புற கண்ணாடியை பார்த்தவாறே முன்னோக்கி இயக்குகிறார். இது விபத்திற்கு மட்டுமே வழிவகுக்கும்.
கிரிக்கெட் வீரராக மோடி : கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கிய சச்சின டெண்டுல்கர், பேட்டிங் செய்யும்போது, பின்னால் நிற்கும் விக்கெட் கீப்பரை கவனித்தபிறகு, பந்து எத்திசையில், எந்த வேகத்தில் வருகிறது என்பதை கவனித்து பின் ரன் எடுக்க முயல்வார்.
பிரதமர் மோடியோ, பேட்டிங் செய்கிறார். விக்கெட் கீப்பரை மட்டும் பார்த்து வருகிறார். பந்து ( சவால்கள்) எத்திசையில், எந்தவேகத்தில் வருகிறது என்பதை எல்லாம் பார்க்காமல் விளையாட நினைக்கிறார். அது அவருக்கு தோல்வியை தான் பரிசளிக்கும் என்று சிந்தனூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் கூறினார்.

 

 

Related Stories


First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last