HEADLINES:
May 21 2018
261 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஏர்இந்தியா பெண் விமானி
12 February 2018

புதுடில்லி: நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதுவதை தவிர்த்து, 261 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பெண் விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

டில்லியில் இருந்து புனேவுக்கு விஸ்டாரா ஏ 320 நியோ என்ற விமானம் பிப்.,7 ம் தேதி சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் 29,000 அடி உயரத்தில் பறக்க, ஏர் டிராபிக் கன்ட்ரோலில் இருந்து அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் விமானி, 27,000 அடி உயரத்தில் விமானத்தை இயக்கி உள்ளார்.

அதே நேரத்தில், அதே உயரத்தில் எதிர்திசையில் இருந்த மும்பையில் இருந்து போபால் செல்லும் ஏர்இந்தியா விமானம் வந்து கொண்டிருந்தது. இரண்டு விமானங்களிலும் 261 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இரு விமானங்களும் நேருக்கு நேர் வந்த போது எச்சரிக்கை கருவிகள் சத்தம் எழுப்பின. தவறை உணர்ந்த விமானிகள் உடனடியாக விமானத்தை வேறு பக்கமாக திருப்பினர். சில நொடிகளில் நடந்த இந்த நிகழ்வால் பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டது. 
இந்த சம்பவம் குறித்து, விமான விபத்துக்கள் குறித்து விசாரிக்கும் கமிஷன் (AAIB) விசாரித்து, ஏர் டிராபிக் கன்ட்ரோல் ரூமில் பணியில் இருந்தவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. 

இதற்கிடையில், சம்பவம் நடந்த போது பெண் விமானிகளே இரண்டு விமானங்களையும் இயக்கியது தெரிய வந்துள்ளது. ஏர்இந்தியா விமானத்தை பெண் கமாண்டர் அனுபமா கோலி இயக்கி உள்ளார். அப்போது தனக்கு இடது பக்கத்தில் இருந்து விஸ்தாரா விமானம் வருவதைக் கண்டார். அதே சமயம் ஏர் கன்ட்ரோலில் இருந்து முரண்பட்ட தகவல் வந்துள்ளது. 
விஸ்டாரா விமானம் நெருங்கியதை கண்ட அவர் சமயோஜிதமாக செயல்பட்டு தனது விமானம் பறந்த உயரத்தை அதிகரித்து உள்ளார். விஸ்டாரா விமானம் மோதாமல் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்து, விபத்தை தவிர்த்துள்ளார். இது தொடர்பாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

 

Related Stories