HEADLINES:
July 18 2018
சுப்ரீம் கோர்ட் விசாரணையை நேரலையாக ஒளிபரப்ப வலியுறுத்தல்
10 February 2018

புதுடில்லி: பார்லி.யின் இரு அவைகளின் நடவடிக்கைகளை நேரலையாக டி.வி.யில் ஒளிபரப்படுவதை போன்று சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகளையும் நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான இந்திரா ஜெயிசிங், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், பார்லி.யில் அவை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்புவதை போன்று சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணையையும் நேரலையாக டி.வி. ஒளிபரப்ப வேண்டும். அதற்கான வழிகாட்டு முறைகளை செயல்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், அனைத்து வழக்குகளையும் நேரலையாக ஒளிபரப்பமுடியாது அரசியல் சாசன பெஞ்ச் சம்பந்தமான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், மட்டுமே நேரலையாக ஒளிபரப்பலாம் இது தொடர்பாக அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் தனது முடிவை மத்திய அரசிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்றார்.

 

 

Related Stories