HEADLINES:
September 20 2018
கவலைகளை நான் என்னுடன் வைத்துக்கொள்வதில்லை : பிரதமர் மோடி
10 February 2018

புதுடில்லி : நான், ஒருபோதும் கவலைகளை என்னுடன் வைத்துக்கொள்வதில்லை. இதன்காரணமாக, தூங்குவது சிறிதுநேரமானாலும், நிம்மதியாக உறங்கி புதுநாளை உற்சாகத்துடன் வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அரபு நாடுகளுக்கு 2 நாட்கள் பயணமாக சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, வளைகுடா நாட்டிலிருந்து வெளியாகும் Gulf News' XPRESS பத்திரிகைக்கு பேட்டியளித்தார். 
அந்த பேட்டியில் மோடி தெரிவித்துள்ளதாவது, நான் தினமும் 4 மணிநேரம் அல்லது 6 மணிநேரமே ( பணிச்சுமையை பொறுத்து) தூங்குகிறேன். குறைவான நேரமே தூங்கினாலும், நிறைவாக தூங்குகிறேன். படுக்கையில் படுத்த சிலவினாடிகளில் தூங்கிவிடுவேன். எனது நிறைவான தூக்கத்திற்கு காரணம், நான் எப்போதுமே கவலைகளை என்னுடன் வைத்துக்கொள்வதில்லை. காலையில் எழுந்தவுடன் சிறிதுநேரம் யோகா பயிற்சி செய்கின்றேன். அது என்னை புத்துணர்ச்சியுடன் இருக்கவைக்கிறது. பின் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகள், இமெயில்கள், போன் அழைப்புகள் உள்ளிட்டவைகளை சரிபார்க்கிறேன்.

 

spaceplay / pause

 

qunload | stop

 

ffullscreen

shift + slower / faster

volume

 

mmute

seek

 

 . seek to previous

12… 6 seek to 10%, 20% … 60%

நிம்மதியாக தூங்க மோடி யோசனை

அதன்பின், எனது பெயரிலான 'நரேந்திர மோடி மொபைல் ஆப்'பில், மத்திய அரசு திட்டங்களுக்கு மக்களின் கருத்துகள் மற்றும் அவர்களின் எதிர்வினைகளை கண்காணிக்கிறேன். இது, எனக்கும், மக்களுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துகிறது.
இரவு உறங்கச்செல்வதற்கு முன்னரே, மறுநாளைய நிகழ்வுகள், சந்திப்புகள் உள்ளிட்டவைகளை தயார் செய்துவிடுகிறேன். இறுதிநேர அயர்ச்சிக்கு எப்போதும் நான் இடம்தருவதில்லை.
பிடித்த உணவு குறித்த கேள்விக்கு, நான் உணவு விஷயத்தில் எப்போதும் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. சாதாரணமான சைவ உணவே எனது விருப்பம்.
விடுமுறை குறித்த கேள்விக்கு, நான் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோதோ அல்லது தற்போது பிரதமராக இருக்கும்நிலையிலோ, விடுமுறை குறித்து யோசித்தது இல்லை. நான் பணியின் காரணமாக ஏற்படும் அசதியினை, மக்களுடன் இணைந்து கலந்துரையாடும்போதோ, அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்கும்வகையில் நான் என்னுடைய கவலைகளை மறந்து நான் உற்சாகமாக பணியாற்ற அது பேரூதவி புரிகிறது.
தொழில்நுட்ப உதவியுடனேயே, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தமுடியும் என்பதை உறுதியாக நம்புபவன் நான் என்றார்.

சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், பகத்சிங், அம்பேத்கர், அமெரிக்கா உருவாக காரணமானவர்களில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் உள்ளிட்டோரை தன்னுடைய ரோல்மாடலாக கொண்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

 

 

Related Stories