HEADLINES:
September 20 2018
காப்பி அடிக்க முடியாததால் தேர்வை தவிர்த்த 10 லட்சம் மாணவர்கள்
10 February 2018

லக்னோ : உத்தர பிரதேசத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 6 ல் துவங்கி நடந்து வருகிறது. இதில் தேர்வு எழுத சுமார் 66 லட்சம் மாணவ, மாணவிகள் பதிவு செய்திருந்தனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 22 ம் தேதியும், 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 12 ம் தேதியும் முடிவடைய உள்ளன. நேற்று (பிப்.,09) பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வும், 12 ம் வகுப்பு கணித தேர்வும் நடந்தது. 

இதற்கிடையில் கடந்த 4 நாட்களில் மட்டும் ஏறக்குறைய 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதுவதை தவிர்த்துள்ளனர். ஒரே நேரத்தில் மிக அதிக அளவிலான மாணவர்கள் தேர்வை தவிர்த்திருப்பதே இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் 2016 ம் ஆண்டில் அதிகபட்சமாக 6.4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொதுத்தேர்வை தவிர்த்துள்ளனர். 

 

spaceplay / pause

 

qunload | stop

 

ffullscreen

shift + slower / faster

volume

 

mmute

seek

 

 . seek to previous

12… 6 seek to 10%, 20% … 60%

10.5 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு டிமிக்கி

இது குறித்து மாநில பள்ளி கல்வித்துறை செயலாளர் நீனா ஸ்ரீவட்சவாவிடம் கேட்ட போது, ஆங்கிலம் மற்றும் கணித தேர்வின் மீதான பயம் காரணமாக அதிகமான மாணவர்கள் தேர்வை தவிர்ப்பது வழக்கமானது தான். இருப்பினும் இதற்கான காரணத்தை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

1991-92 ம் ஆண்டில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், உ.பி., கல்வித்துறை அமைச்சராக இருந்த போது மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க பல நடவடிக்கைள் எடுத்தார். இதனால் தேர்வை தவிர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1.3 லட்சத்தில் இருந்த 1.6 லட்சமாக அதிகரித்தது. மிகக் குறைந்த மாணவர்களே தேர்வு எழுதினர். இந்த ஆண்டும் காப்பி அடிப்பதை தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தம், சிறப்பு கண்காணிப்பு படை, துணை முதல்வர் தினேஷ் சர்மாவின் நேரடி ஆய்வு ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. இந்த தீவீர கண்காணிப்பே மாணவர்களை அதிக அளவில் தேர்வை தவிர்த்துள்ளதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

 

 

Related Stories