HEADLINES:
September 20 2018
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை
08 February 2018

சென்னை: சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பல்லாவரம், உள்ளட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதே போன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, பெரியகுளம்,வடுகப்பட்டி ஆகிய பகுதிகளிலும், நாமக்கல் மாவட்ட பரமத்திவேலூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்று இரவு மதுரையில் லேசான மழை பெய்தது.

தவிர கிருஷ்ணகிரி, கரூர், பெரம்பலூர், தர்மபுரி, தூத்துக்குடி, திருவள்ளூர் சேலம்,திருப்பூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. மதுரை மாவட்டம் மேலூர், கொட்டாம்பட்டி , கீழையூர், வெள்ளரிப்பட்டியிலும், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை, திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

 

 

Related Stories