HEADLINES:
November 17 2018
பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து: ஆந்திராவில் இன்று பந்த்
08 February 2018

ஐதராபாத்: மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததை கண்டித்து இன்று ஆந்திராவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் பா.ஜ.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் அதிருப்தி அடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு கூட்டணியில் வெளியேறும் முடிவை அறிவித்தார்.பின்னர் முடிவை மாற்றினார்.

இந்த சூழ்நிலையில் நேற்று தனது கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் டெலிகான்பரன்ஸ் மூலம் ஆலோசித்தார். அப்போது அவர் பேசியது, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையேயான பிரச்னையை தெருவில் வைத்து தீர்க்க முடியாது பார்லி.யில் தான் தீர்வு காண வேண்டும். எனவே பார்லி.யின் ஆந்திராவிற்காக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டது தொடர்பான சட்டம் என்பன உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து 2 மணி நேரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

 

இன்று பந்த்



இந்நிலையில் பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததை கண்டித்து ஓய்.எஸ்.ஆர். காங்., சி.பி.ஐ. ,சி.பி.எம். உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சியினர் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

 

பஸ் போக்குவரத்து நிறுத்தம்



ஆந்திராவில் எதிர்க்கட்சிகள் நடத்த உள்ள பந்த் காரணமாக தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு இயக்கப்படும் பஸ்கள் தமிழக எல்லைப்பகுதியான திருத்தணி, மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. 

 

 

Related Stories