HEADLINES:
October 17 2019
மோடியை டுவிட்டரில் பின் தொடர்பவர்கள் 4 கோடி பேர்
08 February 2018

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளமான டுவிட்டர் மூலம் பாராட்டு, இரங்கல், அறிவுரை உள்ளிட்டபல்வேறு தகவல்களை தெரிவித்து வுருகிறார். இதையடுத்து மோடியை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அரசியல் தலைவர்களில் டுவிட்டர் மூலம் அதிகம் பின்தொடர்பவர்கள் குறித்து ஆய்வு வெளியானது அதில் பிரதமர் மோடியை 4 கோடியே 48 ஆயிரத்து 316 பேர் எனவும், காங்.தலைவர் ராகுலை 57 லட்சத்து 67 ஆயிரத்து 118 பேர் பின்தொடருகின்றனர் என தெரியவந்துள்ளது இது எந்த இந்திய அரசியல் தலைவர்களுக்கும் இல்லாத வகையில் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் ஆதரவு அதிகரிப்பதை காட்டுகிறது.

 

 

Related Stories