HEADLINES:
June 26 2019
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் இன்று விசாரணை
08 February 2018

புதுடில்லி:'அயோத்தி ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்குகளில், இறுதி விசாரணை, டிச., 5ல் துவங்கும்' என, உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது இதன் விசாரணை இன்று துவங்குகிறது.

உத்தர பிரதேசத்தில் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, 1992, டிச., 6ல் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த, அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக் குரிய, 2.77 ஏக்கர் நிலத்தை, சன்னி முஸ்லிம் வக்ப் வாரியம், நிர் மோகி அகாரா அமைப்பு மற்றும் ராம் லாலா அமைப்பு ஆகியவை பிரித்துக்கொள்ள வேண்டும் என 2010ல் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண், அப்துல் நசீர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகி றது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

 

 

Related Stories