HEADLINES:
July 17 2018
மாலத்தீவு பயணத்தை தவிர்க்க மத்திய அரசு அறிவுரை
07 February 2018

புதுடில்லி : மாலத்தீவில் அரசியல் நெருக்கடி காரணமாக அதிபர் யாமீன் அப்துல் கயூம் அவசர நிலையை பிரகடனம் செய்து உள்ளார். அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீத் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாலத்தீவு விவகாரத்தில் இந்தியா தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அதன் முன்னாள் அதிபர் முகமது நஷீத் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இந்நிலையில் மாலத்தீவு நிலைமை தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், சுப்ரீம் கோர்ட்டின் முழு அமர்வு பிப்ரவரி 1ம் தேதி அளித்த தீர்ப்பை ஏற்க மறுத்ததுடன், அவசர நிலையை அறிவித்து, மக்களின் அரசியல் சாசன உரிமைகளை நிறுத்தி வைத்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கவலை அளிக்கும் அம்சம் ஆகும். இந்நிலையில், மாலத்தீவுக்கு இந்தியர்கள் அத்தியாவசிய தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related Stories


First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last