HEADLINES:
September 19 2018
ஆளுக்கொரு காரணம்...அரசுக்கு எதிராக போராடும் எதிர்க்கட்சிகள்
07 February 2018

புதுடில்லி : பல்வேறு காரணங்களை கூறி மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், நீதிபதி லோயா விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்துள்ளது. அக்கட்சியின் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரான குலாம் நபி ஆசாத் , காஷ்மீர் பாதுகாப்பு விவகாரம் குறித்து பூஜ்ய நேரத்தில் விவாதிக்க நோட்டீஸ் அளித்துள்ளார். காஷ்மீர் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக அவை துவங்கியதும் காங்., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை எதிர்த்தும், நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்புறுதிச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் பார்லி., வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதே போன்ற ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆந்திரவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்., கட்சி எம்.பி.,க்களும் காந்தி சிலை முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். எம்.பி.,க்கள் அனைவரும் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் பார்லி., வளாகம் முன் முழக்கமிட்டு வருகின்றனர். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி இன்று பிற்பகல் 2 மணியளவில் பார்லி.,யில் உரையாற்ற உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Stories