HEADLINES:
July 18 2018
மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு நிதி தடையில்லை: நிடி ஆயோக்
05 February 2018

புதுடில்லி: 'நாடு முழுவதும், 50 கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் கொண்டு வரப்பட உள்ள தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்துக்கு தேவையான நிதி ஆதாரங்கள் உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்த, நிதி தடையாக இருக்காது' என, 'நிடி ஆயோக்' கூறியுள்ளது.


 

 

'நாடு முழுவதும், 10 கோடி ஏழை எளிய குடும்பத்துக்கு, ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ சிகிச்சை பெறும், தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்படும்' என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 50 கோடி பேர்பயனடைவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

 


 

 

ஆனால், இந்த திட்டம் குறித்து, பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். 'இந்த திட்டத்துக்கு, 2018 - 19 பட்ஜெட்டில், 2,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும்' என, பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

 

'நிதியே ஒதுக்காமல் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெற்று அறிவிப்பு' என, காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த, முன்னாள் மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம்கூறியிருந்தார்.

 

 

இந்த திட்டம் குறித்து, நிடி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர், ராஜிவ் குமார் கூறியதாவது:

 

 

மருத்துவ சேவையில் மிகப் பெரிய மாற்றத்தை இந்த திட்டம் ஏற்படுத்தும். ஆனால், பொய்யான தகவல்கள், சந்தேகங்கள் பரப்பப்படுகின்றன. இந்த திட்டத்தை செயல்படுத்த, நிதி ஒரு தடையாக இருக்காது.

 

 


 

 

பட்ஜெட்டில், சுகாதாரத் துறைக்கு கூடுதலாக, 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே உள்ள மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 

உயர் கல்வி நிதி அமைப்பு மூலம், வருவாய் திரட்டவும் வாய்ப்புள்ளது. அதைத் தவிர, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, 1 சதவீதம் கல்வி மற்றும் சுகாதார வரி மூலம், ஆண்டுக்கு, 11,000 கோடி ரூபாய் கிடைக்கும்.

 

 


 

 

அதனால், தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்துக்கு நிதி ஒரு பிரச்னையே இல்லை. மேலும், மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

 

 

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

 

Related Stories