HEADLINES:
November 20 2018
அசாமில் இரட்டை கோபுர வர்த்தக மையம்
05 February 2018

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் இரட்டை கோபுர வர்த்தக மையம் நிர்மாணிக்கப்பட உள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது:அசாம் மாநிலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் பூட்டான் பிரதமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . மாநாட்டின் முடிவில் கவுகாத்தி நகரில் இரட்டை கோபுர வர்த்தக மையத்தை நிர்மாணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென் கிழக்கு நாடுகளுக்கான புதிய வர்த்தக மற்றும் வணிக நுழைவு வாயில் என்ற திட்டத்துடன் பொருளாதார இணைப்புகளை மேம்படுத்தும் வகையில் வர்த்தக மையம் நிர்மாணிக்கப்பட உள்ளது. இதற்காக மாநில அரசு 10.6 ஏக்கர் நிலம் வழங்கி உள்ளது.ரூ.1,950 கோடி செலவில் 65மாடிகளை கொண்டதாக நிர்மாணிக்கப்படும் இம் மையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சேவைகள் ,மாநகர மையம், ஷாப்பிங் மால்கள் அடுக்கு மாடி குடியிருப்பு ,4 ஆயிரம் கார்கள் நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதி அமைக்கப்பட உள்ளது. வரும் ஜூலை மாதம் இதற்கான கட்டுமான பணிகள் துவக்கப்பட உள்ளது.

இது குறித்து மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் கூறுகையில், அசாம் மாநில வர்த்தகத்திற்கு, வர்த்தக மையம் புதிய ஊக்கத்தை அளிப்பதாக அமையும் என கூறினார். 
மத்திய நகர்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங்பூரி கூறுகையில் முன்னேற துடிக்கும் இளைஞர்களின் அபிலாஷகைளை கொண்டுள்ளதாக அமையும்.மேலும் பிரதமரின் கிழக்கு இந்தியா சட்டத்தின் கொள்கை வெளிப்பாடாகவும் இருக்கும் என கூறினார்.

 

 

Related Stories